உருவாகிறதா பாபநாசம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்? கமல்ஹாசனின் தீவிர ஆலோசனை!

Photo of author

By Sakthi

மலையாள திரையுலகில் மோகன்லால் மீனா உள்ளிட்டோரின் இடத்தில் சென்ற 2013ஆம் வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் திரிஷ்யம். இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை பல மொழிகளில் ரீமேக் செய்திருக்கிறார்கள். அதேபோல தற்சமயம் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் திரைப்படத்தில் கமல் கௌதமி உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள். அதேபோல இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருவதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஜீத்து ஜோசப் அவர்கள் திரிஷ்யம் திரைப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் தமிழ் ரீமேக் செய்வேன் என்று இதற்கு முன்னரே தெரிவித்திருந்தார். இருந்தாலும் தற்சமயம் கமல்ஹாசன் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் விக்ரம் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதால் பாபநாசம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரால் நடிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, இந்த திரைப்படத்தில் ஒரே மாதத்தில் நடித்து முடித்து விடலாம் என்ற காரணத்தால், இது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.