இலங்கையை பறக்கவிட்ட இந்தியாவின் இளம் சிங்கங்கள்!

Photo of author

By Sakthi

இலங்கைக்கு எதிராக நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறது. அதேநேரம் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஷிகர் தவன் தலைமையிலான ராகுல் டிராவிட் அவர்களின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டாவது டீம் இலங்கைக்கு பயணம் செய்திருக்கிறது.

இதன்படி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் போதும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது ஆட்டம் நேற்றையதினம் கொழும்புவில் இருக்கின்ற பிரேமதாசா மைதானத்தில் மாலை 3 மணி அளவில் ஆரம்பமானது.இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த நிலையில், இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான அவிஷ்கா மற்றும் வினோத் உள்ளிட்டோர் ஓரளவு ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின்னர் களமிறங்கிய பனுகா 24 மற்றும் தனஞ்செயா 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் காரணமாக, இலங்கை அணி 25 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து திணறிக் கொண்டிருந்தது. ஆனாலும் அடுத்ததாக களமிறங்கிய சரித் 38 ரன்களும் ரசூல் 39 ரன்கள் எடுத்து அணியின் ரன்களை உயர்த்தினார்கள். வனிண்டு 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.இதன் பிறகு சமிகா கருணாரத்னே அதிரடியாக ஆடி 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இசுரு 8 ரன்களில் ஆட்டமிழந்தார். சமிகாவுடன் ஒன்று இணைந்து விளையாடிய துஷ்மந்த சமீரா 13 ரன்களில் ரன் அவுட் ஆக்கப்பட்டார்.

இந்த நிலையில், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 262 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவின் தரப்பில் குல்தீப் யாதவ், தீபக் சாஹர், மற்றும் யுவேந்திர சாகல், தலா இரு விக்கெட்களையும்.க்ருணால் பான்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்கள் அதோடு ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும், கைப்பற்றியிருக்கிறார். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 263 ரன்கள் தேவைப்பட்டது.இதனையடுத்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 43 ரன்களில் அவுட்டானார். ஷிகர் தவான் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இஷான் கிஷன் 59 ரன்களும், மனிஷ் பாண்டே 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தவானுடன் ஒன்றிணைந்து விளையாடிய சூர்யகுமார் யாதவ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரரான தவான் 95 பந்துகளில் 86 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் உள்ளிட்டவையும் அடங்கும். அதோடு அவர் கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றிருந்தார். இலங்கை அணியின் தனஞ்ஜயா 2 விக்கெட்டுகளும், லக்ஷன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.. இதனை அடுத்து இந்திய அணியின் 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்களை எடுத்தது இதன் காரணமாக, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.