தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி! இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!

0
117

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மேலும் அந்த அணி t20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் t20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ளது. மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் நேற்றைய தினம் நடந்தது.

இதில் டாஸ் என்ற இந்திய அணி முதலில் வந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் குயிண்டன் டிகாக் ரோஷோ உள்ளிட்டோர் அதிரடி ஆட்டம் காரணமாக தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 என்ற மிகப் பெரிய இலக்கை எட்டியது.

அதிகபட்சமாக ரோஷோ 48 பந்துகளை சந்தித்து 8 சிக்ஸர் 7 பவுண்டரியுடன் சதமடித்தார். குயின்டன் டி காக் 43 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 68 ரன்களை சேர்த்தார்.

இதன் பிறகு 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களம் புகுந்தார்கள். கேப்டன் ரோஹித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தினேஷ் கார்த்திக் ஜோடி சற்று நிதானமாக விளையாடி பின்பு அதிரடி காட்டியது. 21 பந்தங்களை சந்தித்த தினேஷ் கார்த்திக் 4 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 46 ரன்கள் அதிரடியாக சேர்த்தார். 2 சிக்ஸர் 3 பவுண்டார்களுடன் ரிஷப் பண்ட் 27 ரன்களை சேர்த்தார்.

இதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் சொற்பரன்களில் வெளியேற தீபக் சாகர் 31 ரன்களும் உமேஷ் யாதவ் 20 ரன்கள் சேர்த்தனர். கடைசியாக 18.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே சேர்த்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அடுத்ததாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகிறது. முதல் ஆட்டம் லக்னோவில் தொடங்குகிறது. இரண்டாவது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ராஞ்சி மைதானத்தில் ஆரம்பமாகிறது .கடைசி ஆட்டம் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி டெல்லி மைதானத்தில் நடக்கிறது.

Previous articleஅடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கெல்லாம் மழை எச்சரிக்கை!
Next articleநண்பன் என்று கூட பார்க்காமல் இப்படியா செய்வது? முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பேச்சால் பரபரப்பு!