இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா இந்திய அணி?

0
215

இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி டெல்லியிலுள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. லோகேஷ் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இதில் களமிறங்குகிறது.

வர்மா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியிடம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அசத்திய இளம் வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் உலக கோப்பைக்கு முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது.

ஆகவே இந்த தொடரில் ஒவ்வொரு வீரரும் தங்களுடைய திறமையை நிரூபிக்க போராடுவார்கள் என்ற காரணத்தால், எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. நேற்றைய தின பயிற்சியின்போது ஹர்திக் பாண்டியா பங்கேற்கவில்லை இன்றைய தினம் அவர் அணியில் இணைவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களையும், புகைப்படங்களையும், பிசிசிஐ தன்னுடைய வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறது.

Previous articleஅதிர்ச்சி! உலகளாவிய நோய்த்தொற்று பாதிப்பால் இறந்தவரின் எண்ணிக்கை 63.21 லட்சமாக அதிகரிப்பு!
Next articleபிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி பெறும் பயனாளிகள் இதை செய்யவில்லை என்றால் 12-வது தவணை நிறுத்தப்படும் !உடனே இதை செய்யுங்கள்!