இயக்குனர் ஷங்கர் மகளை மணக்கும் கிரிக்கெட் வீரர்!

Photo of author

By Kowsalya

இயக்குனர் ஷங்கர் மகளை மணக்கும் கிரிக்கெட் வீரர்!

Kowsalya

Updated on:

இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான் இவரது இயக்கத்தில் ஒரு படம் நடித்து விட வேண்டும் என்று எத்தனையோ பேர்கள் தவம் இருக்கிறார்கள். இப்பொழுது சங்கரின் பெரிய மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்றும் சொல்லப்படுகிறது.

சங்கரின் மூத்த மகளான டாக்டர் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொள்ளும் மாப்பிள்ளை யார் தெரியுமா? அவர் என்ன செய்கிறார் தெரியுமா?

ஐஸ்வர்யா ஷங்கரை திருமணம் செய்துகொள்ளப் போகும் மாப்பிள்ளை பெயர் ரோஹித். இவர் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆவார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடி மதுரை பந்தர்ஸ் அணியின் உரிமையாளர் தாமோதரன் தான் ரோஹித்தின் தந்தை.



ரோஹித்துக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் புதுச்சேரி ரஞ்சி அணியை தாமோதரன் துவக்கி வைத்தார்.

ஐஸ்வர்யா ரோஹித் திருமணம் வரும் 27ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக பொள்ளாச்சியில் சிம்பிளாக நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் சிம்பிள் நமக்கு ஒத்துவராது என்று பிரம்மாண்டத்தை கையில் எடுத்துள்ளார். திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகினர் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.