கடவுள் இருக்கான் குமாரு இந்துக்களிடம் அசிங்கப்பட்ட திமுக மற்றும் பெரியார் ஆதரவாளர்கள்

0
185

கடவுள் இருக்கான் குமாரு இந்துக்களிடம் அசிங்கப்பட்ட திமுக மற்றும் பெரியார் ஆதரவாளர்கள்

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவுவதாக தமிழ்நாடு அறநிலை துறை சார்பாக ஒரு அறிக்கை கடந்த வாரம் வெளியானது.

இவ்வாறு தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சியின் காரணமாக பெரும்பாலான இடங்களில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர், எனவே மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்று தமிழக அறநிலையத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

இது வழக்கமாக கிராமங்களில் உள்ள கோவில்களில் வருடம் ஒரு முறை அந்த பகுதி மக்களால் நடத்தப்படும் வழக்கம் என்றாலும் தமிழக அறநிலை துறையால் அறிவிக்கப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்து சமய கோவில்களை பராமரித்து வரும் தமிழக அறநிலை துறை இந்துக்களின் பழக்க வழக்கங்களை மறக்காமல் அதை அரசு அறிவிப்பாக வெளியிட்டது பெரும்பாலான இந்துக்களின் வரவேற்பை பெற்றது.

ஆனால் சாதி மற்றும் மதங்களை வைத்து பிரிவினை அரசியல் செய்யும் தலைவர்கள் இதற்கு விமர்சனம் எழுப்பி வந்தார்கள். குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் திராவிட கழக தலைவர் வீரமணி யாகம் நடத்தினால் மழை வருமா? என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார். ஆனால் இவ்வளவு விமர்சனங்களையும் மீறி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் தமிழக அறநிலை துறை அறிவிப்பின் படி மழை வேண்டி யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன.

இதனையடுத்து தமிழக அறநிலை துறை மற்றும் இந்துக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.மேலும் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனத்த மழையும் பெய்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து மழை இல்லாமல் வறட்சி நிலவி வந்த நிலையில் இந்த மழையால் மக்களும் தமிழக விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் மழை வர யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்ட தமிழக அறநிலை துறையையும் பாராட்டி வருகின்றனர்.

அறநிலை துறையை பாராட்டும் அதே நேரத்தில் கோவில்களில் யாகம் நடத்த அறநிலைய துறை உத்தரவிட்டபோது யாகம் நடத்தினால் மழை வருமா இது ஒரு முட்டாள்தனம் என்று விமர்சனம் செய்து வந்த கி வீரமணி உள்ளிட்ட பெரியாரிய இயக்கங்களை சார்ந்தவர்களையும் அதன் கூட்டணி கட்சியான திமுகவினரையும் இப்போது சமூகவலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக யாகம் நடத்தினால் முதல்வர் ஆகலாம் என்ற நம்பிக்கை இருக்கும் போது யாகம் நடத்தினால் மழை பெய்யும் என்று நம்ப கூடாதா? என்றும் திமுக,பெரியார் மற்றும் திராவிட ஆதரவாளர்களை குறிவைத்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Previous articleதருமபுரி மற்றும் தேனி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
Next articleநாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்-மருத்துவர் ராமதாஸ்