Breaking News, State

8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்தார்! சென்னை வாலிபர் சாதனை!!

Photo of author

By Sakthi

8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்தார்! சென்னை வாலிபர் சாதனை!
எவரெஸ்ட் மலை சிகரத்தின் 8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார் சென்னயை சேர்ந்த வாலிபர்.
சென்னையில் உள்ள  கோவளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 27 வயதான வாலிபர் ராஜசேகர். இவர் அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் அலைச் சறுக்கு போட்டிக்கு பயிற்சாளராகவும் இருந்து வருகிறார். அலை சறுக்கு பயிற்சியாளராக இருக்கும் இவருக்கு மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட ஒரு வருடமாக மலையேற்றத்திற்கான பயிற்சிகளை எடுத்து வந்தார்.
எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏற வேண்டும் என்பது இவருடைய கனவு ஆகும். இதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட இவர் 6 மலைகளில் ஏறி தன்னைத் தானே தயார் செய்து கொண்டார். எவரெஸ்ட் மலை ஏறும் பொழுது கடும் குளிரை தாங்க வேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங்க், நேபாளம் போன்ற கடும் குளிர் நிறைந்த பகுதிகளில் தங்கி மனதையும் உடலையும் குளிருக்கு தயார் செய்தார்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து பயணத்தை தொடங்கிய வாலிபர் ராஜசேகர் கடந்த மே 19ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் எவரெஸ்ட் மலையின் சிகரத்தை அடைந்தார். சென்னையை சேர்ந்த வாலிபர் ராஜசேகர் 8850 மீட்டர் உயரத்தை கிட்டதட்ட ஒரு மாதத்தில் கடந்து எவரெஸ்ட் மலை சிகரத்தை அடைந்து சாதனை படைத்து தனது கனவையும் நினைவாக்கியுள்ளார்.

தளபதி68 திரைப்படத்தை இயக்கும் அடுத்த இயக்குநர்!அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

திரும்பப் பெறும் 2000 ரூபாய் நோட்டு! இதை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை!!