ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்! காரணம் இதுதான்!

Photo of author

By Sakthi

ஆப்கானிஸ்தான் நாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் தீவிரவாத அமைப்பான தாலிபான்களின் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், தற்போது அங்கு தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அந்த நாட்டின் அதிபர் ஏராளமான பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரம் அவர் ஏமன் நாட்டில் தஞ்சம் புகுந்து இருக்கிறார் என்றும், சொல்லப்பட்டது.

அதேநேரம் அந்த நாட்டில் அனைத்து பகுதிகளையும் தாலிபான்களின் அமைப்பு கைப்பற்றி விட்ட சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை மட்டும் அமெரிக்க ராணுவம் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. சில வாரங்கள் காபூல் நகரை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த அமெரிக்கா பின்பு மெல்ல, மெல்ல தன்னுடைய படைகளை விலக்கிக் கொள்ள தொடங்கியது.

இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் அரசு தன்னுடைய அரசாங்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு அமெரிக்கா தன்னுடைய முழு ஒத்துழைப்பை இதுநாள் வரையில் வழங்கி வந்தது. ஆனால் எங்களுடைய ஒத்துழைப்பை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. எப்பொழுதும் ஒரு நாடு சரியான ஆட்சிமுறையை பின்பற்ற வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் அதற்கு மாறாக எப்பொழுதும் அமெரிக்கா அடுத்த நாடுகளின் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதற்கு விருப்ப படாது என கூறியிருந்தது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை உட்பட ஒட்டுமொத்த பகுதிகளையும் தாலிபான் அமைப்பு கைப்பற்றியதை தொடர்ந்து அந்த நாட்டில் இருந்து வெளியேற விருப்பம் உள்ள நபர்களை பாதுகாப்பாக எந்தவிதமான அச்சுறுத்தலும் இன்றி அந்த நாட்டை விட்டு அனுப்புவதற்கு தாலிபான்கள் முன்வரவேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது சென்ற ஆகஸ்ட் மாதம் இந்த அமைப்பு ஆட்சி பொறுப்பேற்ற போது ஏராளமான பொதுமக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சி செய்தார்கள்.

அந்த சமயத்தில் காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் 150 பேர் வரையில் பலியானவர்கள் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வருவதன் காரணமாக, பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் வழங்கும் பணியை ஆப்கானிஸ்தான் அரசு ஆரம்பித்து இருக்கிறது. இதனால் பலர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக விண்ணப்பம் செய்வதற்காக காபூலில் இருக்கின்ற பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு ஏராளமானோர் திரண்டதாகச் சொல்லப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு முதல் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பம் செய்தார்கள், அதில் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மற்ற நாடுகளுக்கு செல்வதாக குறிப்பிட்டு இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதய நோய் உட்பட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட ஒருசிலர் அவசர ஊர்தியில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தார்கள். இது குறித்து முகமது உஸ்மான் என்பவர் தெரிவிக்கும்போது நான் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றேன். எனக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால் பாகிஸ்தான் நாட்டிற்கு உடனடியாக செல்ல வேண்டும், அதற்காக விண்ணப்பம் கொடுக்க வந்திருக்கிறேன் என்று கூறினார்.

அதேபோல பலரும் மருத்துவ சிகிச்சைக்காக செல்வதாகக் கூறினார்கள், பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதன் காரணமாக, அங்கே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.