இன்று ஆரம்பமாகிறது 15வது ஐபிஎல் திருவிழா! ரசிகர்கள் மகிழ்ச்சி வெற்றி பெறுமா சென்னை அணி?

0
176

15வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று ஆரம்பமாகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட மாநிலங்களில் அணி அறிமுகமாவதால் அணிகளின் எண்ணிக்கை 10 அதிகரித்திருக்கிறது. அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதிச்சுற்றுக்கு நுழைந்த அணிகள், என்ற அடிப்படையில் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல், லக்னோ சூப்பர் ஜெயன்ட், உள்ளிட்டவை பிரிவிலும் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்டவை பி பிரிவிலும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனாலும் ஒரு வீரராக மகேந்திர சிங் தோனி நீடிப்பது சென்னை அணிக்கு கூடுதல் பலமாக திகழ்கிறது.

கடந்த ஐபிஎல் சீசனில் 235 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட்,டேவன் கான்வே, வெய்ன் பிராவோ, அம்பத்தி ராயுடு, உள்ளிட்டோர் நம்பிக்கை தரும் வீரர்களாக இருக்கிறார்கள்.

கல்கத்தா அணியை பொறுத்தவரையில், அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஆண்ட்ரூ ரசல், ஆல்ரவுண்டர் வெங்கடேச ஐயர், நிதிஷ் ராணா, உள்ளிட்டோர் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள். பந்துவீச்சில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, டிம் சவுதி, சிவம் மாவி, உள்ளிட்டோர் பலம் சேர்க்கிறார்கள்.

இந்த இரு சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் ரசிகர்களின் ஆவலை அதிகரித்திருக்கிறது இந்த2 அணிகளும் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்திருக்கின்றன. இதில் 17 ஆட்டத்தில் சென்னை அணியும், 8 ஆட்டத்தில் கொல்கத்தா அணியும், வெற்றி பெற்றிருக்கின்றன.

இரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Previous article8th படிச்சிருக்கீங்களா? தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு அருமையான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்க!
Next articleபுர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்தது தமிழ் செம்மொழி! முதலமைச்சர் ஸ்டாலின் ஆர்வத்துடன் பார்வையிட்டார்!