மத்திய அரசின் இந்தியன் ரயில்வேவில் கலைஞர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கோட்டாவின் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வேயில் இருக்கின்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பணியின் விவரங்கள்:
கலைஞர் துறை காலிப்பணியிடம் வயது சம்பளம்
Octopad instrument player 1 18 இல் இருந்து அதிகபட்சம் 30 வயது வரை ரூ.19,900 – 63,200/-
Male Singer 1 18 இல் இருந்து அதிகபட்சம் 30 வயது வரை ரூ.19,900 – 63,200/-
இப்பணிக்கான தகுதி
இந்தியன் ரயில்வேயில் கலைஞர்களுக்கான பணியாற்ற 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு நிகரான கல்வியை பெற்றெடுக்க வேண்டும்.
கலைஞர் கோட்டாவிற்கான தகுதி:
Octopad instrument player அரசு அங்கீகரிக்கப்பட்ட இசைக் கல்லூரியில் பயின்று இருக்க வேண்டும்.
Male Singer அரசு அங்கீகரிக்கப்பட்ட இசைக் கல்லூரியில் கிலாசிகல் /லைட் இசை பயின்றவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் கணினியின் மூலமாக எழுத்து தேர்வு, நடைமுறை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வுக்கான கட்டணம்
SC / ST / Ex-Servicemen / Persons with Disability – ரூ.250/-
மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள் 17/11/2022 காலை 10 மணி
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 16/12/2022 இரவு 11.59 வரை
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.