மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு:! அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு!
தமிழகத்தில் சுமார் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆண்டிற்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்படும்.இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சுங்கச்சாவடி கட்டணம் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி உயர்த்தப்படும் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த கட்டணத்திலிருந்து 5 அல்லது 10 சதவீதம் கட்டணத்தை உயரத்தி வசூலிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா முழு ஊரடங்கால் சுங்கச்சாவடிகளும் மூடப்பட்டிருந்த நிலையில்,சுங்கச்சாவடி கட்டணம் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி உயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.தற்போது மீண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படும் என்கிற தகவல்,ஓட்டுநர்கள் மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் காய்கறிகளின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.