மாதம் ரூ.2390 உயர்த்தப்படும் சுங்க கட்டணம்:!! அதிர்ச்சியில் மக்கள்!
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் முதல் திட்ட பகுதியை பயன்படுத்தும் வாகனங்களுக்கு,2006 ஆம் ஆண்டு முதல் 2036 ஆம் ஆண்டு வரையிலான முப்பது ஆண்டுகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் காண்ட்ராக்ட் ஐ.டி விரைவுச்சாலை நிறுவனத்தால் போடப்பட்டுள்ளது.மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 10% சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என்றும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க ஐ.டி விரைவுச்சாலை நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி 2002 ஆண்டு வரை புதிய சுங்க கட்டணம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அந்த சுங்கக் கட்டண விவரங்கள் பின்வருமாறு:
காருக்கு ஒரு முறை செல்ல 30 ரூபாயும்,சென்றுவர 60 ரூபாயும் ஒரு நாளைக்கு 100 ரூபாயும் மாதத்திற்கு 2390 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆட்டோவிற்கு ஒருமுறை செல்ல 10 ரூபாயும் சென்றுவர 19 ரூபாயும் நாளொன்றுக்கு 33 ரூபாயும் மாதத்திற்கு 311 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேருந்துக்கு ஒரு முறை 78 ரூபாயும் சென்று வர 154 ரூபாயும் நாள் ஒன்றுக்கு 231 ரூபாயும் மாதத்திற்கு 5050 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை 49 ரூபாயும் சென்றுவர 98 ரூபாயும் ஒரு நாளைக்கு 136 ரூபாயும் மாதத்திற்கு 3050 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சரக்கு வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல 117 ரூபாயும் சென்றுவர 120 ரூபாயும் நாளொன்றுக்கு 340 ரூபாயும் மாதத்திற்கு 7500 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களுக்கு ஒரு முறை 234 ரூபாயும் சென்றுவர 440 ரூபாயும் நாளொன்றுக்கு 676 ரூபாயும்,மாதத்திற்கு 15110 ருபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.