எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது, அவருக்கு பின் செங்கோட்டையன் சென்று அமித்ஷாவை சந்தித்தது, மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி என்று அமித்ஷாவிடம் பேசியது என கடந்த சில நாட்களில் தமிழக அரசு சூடு பிடித்திருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதன்பின் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தொடர்ந்து செல்லி வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால், திடீர் திருப்பமாக அமித்ஷாவை சந்திக்கப்போனார். மக்கள் பிரச்சனை பற்றி பேசப்போனேன் என அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை. ‘அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து தூக்கினால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ரெடி’ என அமித்ஷாவிடம் பழனிச்சாமி சொன்னதாக சொல்லப்படுகிறது. ஆனால், அமித்ஷாவுக்கு அதில் விருப்பமில்லை என்கிறார்கள்.
ஒருபக்கம், தமிழகத்திற்கு புதிய பாஜக தலைவர் நியமிக்கப்படவுள்ளார் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தல் வரை அண்ணாமலையை மாற்றும் எண்ணம் அமித்ஷாவுக்கு இல்லை எனவும் சொல்கிறார்கள். அதோடு, எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை இருக்கும் வரை அதிமுக – பாஜக கூட்டணி அமையாது என்பதால், பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களை வைத்து அதிமுகவுக்கு புதிய தலைமையை உருவாக்கும் எண்ணமும் அமித்ஷாவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையன் அந்த தலைமையாக இருக்கலாம் என்கிறார்கள்.
அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக முன்னாள அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி. தம்பிதுரை ஆகியோரும் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை தனித்தனியாக சந்தித்து பேசியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதுவரை 2 முறை செல்லி சென்று பாஜக தலைகளை பார்த்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். எனவே, வரும் நாட்களில் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் என்றும் சொல்கிறது டெல்லி வட்டாரம்.