ADMK: அதிமுக ஒன்றிணைய வேண்டுமென பலரும் பிரிந்தவர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சமயத்தில் அமித்ஷாவை செங்கோட்டையனும், இபிஎஸ்யும் சந்தித்தது, அண்ணாமலையும், டிடிவி தினகரனும் சந்தித்தது, இபிஎஸ், நயினார் நாகேந்திரன் சந்திப்பு போன்ற பல நிகழ்வுகள் அரசியல் களத்தில் நிகழ்ந்து விட்டன. தற்போது புதிய திருப்பமாக அதிமுக முன்னாள் எம்.பி. சி.வி. சண்முகத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.
சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பாஜகவில் நடைபெறும் விழாவிற்கு அழைப்பு விடுக்க வந்ததாகவும், பாமகவை கூட்டணியில் சேர்க்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பற்றியும் விவாதித்ததாக கூறினார். இந்த சந்திப்பிற்கு முன் சி.வி சண்முகம் அவர்கள், எந்தக் கட்சி அவர்களுக்கு அடையாளம் கொடுத்ததோ, எந்த கட்சி அவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்ததோ, அந்தக் கட்சியின் தலைமை கழக அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவர்களை, துரோகிகளை அதிமுக கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறோம்.
அந்தக் கட்சி இணைய வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்? என ஓபிஎஸ்யை மறைமுகமாக சாடியிருந்தார். இதற்கு பதிலடியாக ஓபிஎஸ், இப்போது யார் அவர் வீட்டின் முன் சென்று கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று கேட்டது என கூறியிருந்தார். தொடர்ந்து நயினார் நாகேந்திரனை எதிர்ப்பவர்களை அண்ணாமலை சந்திப்பதும், அண்ணாமலை, ஓபிஎஸ்யை எதிர்ப்பவர்களை நயினார் நாகேந்திரன் சந்திப்பதும் நடந்த வண்ணம் உள்ளது. நயினார் நாகேந்திரன், சி.வி.சண்முகத்தின் சந்திப்பு அண்ணாமலைக்கு எதிரானதாகவே இருக்குமென அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.