அஸ்வின் தொடர்பாக சிவாங்கி வெளியிட்ட ருசிகர தகவல்!

Photo of author

By Sakthi

அஸ்வின் தொடர்பாக சிவாங்கி வெளியிட்ட ருசிகர தகவல்!

Sakthi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டு சீசன் களை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. இந்த நிலையில், மூன்றாவது பாகத்தை துவங்க இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்தில் போட்டியாளராக அஸ்வினும் கோமாளியாக சிவாங்கி பங்கேற்றார்கள் அவர்கள் இருவருமே மக்களின் மனதை பறிக்கும் விதமாக அவர்களை மிக அருமையாக பொழுதுபோக்கு செய்தார்கள்.

இவர்களுடைய ஜோடி ஆனது ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிடித்துப் போய் விட இவர்களுக்காகவே ஒருசிலர் அந்த நிகழ்ச்சியினை கவனிக்கத் தொடங்கினார்கள். தற்சமயம் சிவாங்கி அஸ்வின் தொடர்பாக ஒரு பேட்டியில் உரையாற்றியிருக்கிறார். கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினை முதன்முறையாக பார்த்த சமயத்தில் இவ்வளவு அழகான ஒரு பையன் சமைப்பதற்கு என்று வந்திருக்கிறானே என்றுதான் தோன்றியது என அவர் தெரிவித்திருக்கிறார்.அவர் மிகவும் நேர்த்தியான மனிதர் என்னுடைய வளர்ச்சியை பார்த்து அவரும், அவருடைய வளர்ச்சியை பார்த்து நானும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம் என்று தெரிவித்திருக்கிறார்..