Fenchal storm:”ஃபெஞ்சல்” புயலால் ECR முதல் மரக்காணம் வரையான கிழக்கு கடற்கரை சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வங்க கடலில் கடந்த சில நாட்களாக நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் புயலாக மாறியது. அதற்கு ஃபெஞ்சல் என பெயர் வைக்கப்பட்டது. இது புயலாக மாறும் அல்லது வலுவிளக்குமாக என்ற என கணிக்க முடியாத அளவில் தென் கிழக்கு வங்க கடலில் நகராமல் இருந்து.
இந்த நிலையில் அது புயலாக நேற்று உருவாகி தமிழகம் நோக்கி 13 கி மீ வேகத்தில் நகரத் தொடங்கியது. இந்த புயலானது இன்று பிற்பகலில் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. காற்றின் வேகம் சுமார் 90 கி மீ இருக்கும் எனவும்,அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.
மேலும் இந்த புயலின் வேகம் 10 கி மீ ஆக குறைந்தது.மேலும் புயல் கரையை கடக்கும் திசையை மாற்றி அமைத்து மரக்காணம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தற்போது சூறாவளி காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. விழுப்புரம் கடற்கரை கொந்தளிப்பாக இருக்கிறது 8 அடி உயரம் வரை கடல் அலைகள் ஏல தொடங்கி இருக்கிறது.
பலத்த காற்றினால் ECR கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மரங்கள் நடு ரோட்டில் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இன்று மாலை புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.