தமிழகம் முழவதும் சூறாவளி சுற்றுப்பயணம்! தொண்டர்களை சந்திக்க கிளம்பிய சசிகலா! 

Photo of author

By Sakthi

தமிழகம் முழவதும் சூறாவளி சுற்றுப்பயணம்! தொண்டர்களை சந்திக்க கிளம்பிய சசிகலா!
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும் மக்களையும் சந்திக்கும் பயணத்தை சசிகலா அவர்கள் நேற்று(ஜூலை17) தொடங்கியுள்ளார்.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலா அவர்கள் தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பை அடுத்து சசிகலா அவர்கள் நேற்று(ஜூலை 17) தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். சசிகலா அவர்கள் தென்காசி மாவட்டம் காசிமேஜர்புரத்தில் இருந்து தன்னுடைய சுற்றுபயணத்தை தொடங்கினார்.
பின்னர் அங்கு கூடியிருந்த மக்களையும் தொண்டர்களையும் சந்தித்த சசிகலா அவர்கள் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்பொழுது சசிகலா அவர்கள் திமுக பற்றியும் அதிமுக பற்றியும் பேசினார். திமுக செய்யாமல் விட்ட திட்டங்கள் குறித்தும் அதிமுக கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் பேசினார்.
மக்கள் மத்தியில் சசிகலா அவர்கள் கூறுகையில் “தற்பொழுது தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக கட்சியின் தலைமையிலான ஆட்சியில் அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி வருகின்றது. மக்களுக்கான எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை.
தேர்தலுக்கு முன்பு அறிவித்த எந்த திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சாலைகள் படு மோசமான நிலையில் இருக்கின்றது. தமிழகத்தில் பிரபலமான சுற்றுலாத் தலமாக இருக்கும் குற்றாலத்திற்கு செல்லும் சாலை கூட மிகவும் மோசமாக இருக்கின்றது.
தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடம் இன்னும் திறக்கப்படமால் இருக்கின்றது. அரசுத் துறை அலுவலகங்கள் இன்னும் நெல்லை மாவட்டத்தில் தான் செயல்பட்டு வருகின்றது.
அதிமுக கட்சியில் தற்பொழுது பிளவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நாங்கள் ஒன்று கூடுவோம். அதிமுக கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று பேசினார்.