தாதாவின் ஆட்டோ பயோபிக் திரைப்படம்! ஆர்வத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அவர்களின் ஆட்டோ பயோபிக் திரைப்படத்தை பற்றி சிறிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவராகவும் சவுரவ் கங்குலி இருந்துள்ளார். இவரை தாதா என்று அனைவரும் அழைக்கின்றனர். தாதா என்றால் வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்று அர்த்தம். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக வந்த கேப்டன்களில் சவுரவ் கங்குலி அவர்களும் ஒருவர்.
சவுரவ் கங்குலி அவர்கள் 1996ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி அடுத்தடுத்து இரு சதங்கள் அடித்து கவனம் ஈர்த்தார். தனது திறமையாலும் தனித்துவமான தலைமை பண்பாலும் அணிக்கு சிறந்த கேப்டனாக சவுரவ் கங்குலி அவர்கள் செயல்பட்டார்.
இந்த நிலையில் சவுரவ் கங்குலி அவர்களின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இது குறித்து கங்குலி அவர்களிடம் பேசியதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து இந்த திரைப்படத்தில் சவுரவ் கங்குலி அவர்களின் கதாப்பாத்திரத்தில் நடிக்க ரன்பீர் கபூர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகின்றது.
இந்த திரைப்படம் சவுரவ் கங்குலி அவர்களின் ஆரம்ப நாட்களில் இருந்து பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை உள்ள முக்கிய சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.