நாட்டில் ஒரு நாளைய நோய் தொற்று பாதிப்பு 2500 ஐ கடந்தது!

0
167

நாட்டிலும் நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைந்து வருகிறது என சொல்லப்படுகிறது.ஆனாலும் மறைமுகமாக இந்த நோய்த்தொற்று பரவல் உருமாற்றமடைந்து பொதுமக்களிடையே பரவி வருவதாக சொல்லப்படுகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் சிலர் அரசியல் செய்வதற்காகவே இந்த நோய்த்தொற்று பரவலை பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தும் பொதுமக்களிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில், நாட்டில் கடந்த சில நாட்களாக தினசரி நோய் தொற்று பாதிப்பு சற்றே அதிகரிப்பதும் குறைவதுமாய் இருந்து வருகிறது.

இப்படியான சூழ்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஒரு நாளைய நோய் தொற்று பாதிப்பு 2628 என அதிகரித்திருக்கிறது.

நேற்று 2124 என இருந்த நோய் தொற்று பாதிப்பு இன்றைய தினம் சற்று அதிகரித்து 2,628 என காணப்படுகிறது. இதன்மூலமாக இதுவரையில் நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,31,42,192லிருந்து 4,31,44,820 என அதிகரித்திருக்கிறது.

ஒரேநாளில் 2,167 பேர் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். இதுவரையில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,26,02,714லிருந்து 4,26,04,881 என அதிகரித்திருக்கிறது.

அதோடு நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், இதுவரையில் 5,24,525 பேர் நோய் தொற்றால் பலியாகி இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 14,971லிருந்து 15,414 என அதிகரித்திருக்கிறது.

நாட்டில் ஒரே நாளில் 13,13,687 பேருக்கு நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 192 82 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Previous articleஇலங்கையில் நடந்த வன்முறை சம்பவம்! ராஜபக்சேவுக்கு கிடுக்குப்பிடி போட்ட காவல்துறையினர்!
Next articleஅஜித்துடன் மோதும் நடிகர் கார்த்தி! வெளியானது அறிவிப்பு