இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு! ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு!

Photo of author

By Sakthi

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்தொற்று ஏற்படுதல் பின்பு மெல்ல, மெல்ல, 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பறவை மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது.

இந்த நோய் தொடர்பாக பால் காரணமாக. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, உள்ளிட்ட மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடுகள் வெகுவான பாதிப்பை சந்தித்தனர்.

இந்த சூழ்நிலையில், இந்தியாவிலும் இந்த நோய்த்தொற்று பரவல் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச்சு மாதத்தில் பரவத்தொடங்கியது. இந்த நோய்த் தொற்று பரவ அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்பிறகு நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மத்திய, மாநில, அரசுகள் தீவிரம் காட்டினர். அதன் பலனாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக, தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நோய்த் தொற்று பரவ தொடங்கியது. இதனால் இந்தியாவில் மக்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் தற்சமயம் மீண்டும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை தினசரி நோய் தொற்று பாதிப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில், தினசரி நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் 2927 நேற்று 3, 303 என இருந்த நோய்த்தொற்று பரவல் இன்று 3,377 ஆக அதிகரித்திருக்கிறது.

ஆகவே நாட்டில் ஒட்டுமொத்த நோய் தொற்று பாதிப்பு 4,30,68,799லிருந்து 4,30,72,176 என அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் 2,496 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்ருக்கிறார்கள்.

நாட்டில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,28,128லிருந்து 4,25,30,6,22 என்று அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் 17,801 பேர் இந்த நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோல நாடு முழுவதும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை 16,980லிருந்து 17,801 என அதிகரித்திருக்கிறது.

நாட்டில் நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 60 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதன் காரணமாக, நோய்த்தொற்று பலி எண்ணிக்கை 5,23,753 என அதிகரித்திருக்கிறது. இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டிருக்கிறது.