தமிழ்நாட்டிலிருக்கின்ற மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் பல காலமாக கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். அதில் முக்கியமாக பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன்மொழிந்து வருவது பாட்டாளி மக்கள் கட்சிதான்.இந்த மதுபான கடைகளால் குடும்பங்களும் சீரழிந்து வருகிறது, அதோடு பெண்கள் வெகுவாக பாதிக்கப் படுகிறார்கள்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இந்த மதுபானம் காரணமாக, தான் அதிகமாக தமிழகத்தில் நடைபெறுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த விதத்தில் தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது நாள்தோறும் மனைவியின் மீது கணவன், தன் கணவன் மீது, மனைவி தாக்குதல், கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி வருகிறது. இதில் பெற்றோர்கள் பாதிப்பு என்றாலும் கூட அதற்கு மேலாக பாதிக்கப்படுவது அவர்களுடைய குழந்தைகளாகத்தான் இருக்கிறது.
அந்த விதத்தில் தரசமயம் நடந்த சம்பவமொன்று இவ்வாறு ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகேயிருக்கின்ற கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், இவருடைய மனைவி கவுசல்யா, இவர்கள் 2 பேரும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.
இருந்தாலும் குடிப்பழக்கம் காரணமாக, ராஜமாணிக்கம் சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதன் காரணமாக, மனைவி மற்றும் கணவன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே குடியை கைவிடுமாறு கணவனை கவுசல்யா தொடர்ந்து அறிவுறுத்திவந்திருக்கிறார். ஆனாலும் ராஜமாணிக்கம் நாள்தோறும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், மது போதையில் மறுபடியும் தகராறு செய்ததன் காரணமாக, ஆத்திரமடைந்த மனைவி கவுசல்யா கோவில் பட பாணியில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து கணவன் ராஜமாணிக்கத்தின் மீது ஊற்றினார்.
ஆகவே வெந்நீரின் சூடு தாங்க முடியாத காரணத்தால் வலியில் துடித்தார் ராஜமாணிக்கம் இதனை கண்டா அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இந்த சம்பவம் குறித்து பெருமாநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.