இன்று நாள் யாருக்கு எப்படி அமையும்? இன்றைய ராசி பலன்கள்

0
268
Daily Rasi Palan Today-இன்றைய ராசி பலன்கள்-News4 Tamil Latest Astrology Updates and News in Tamil
Daily Rasi Palan Today-இன்றைய ராசி பலன்கள்-News4 Tamil Latest Astrology Updates and News in Tamil

இன்று நாள் யாருக்கு எப்படி அமையும்? இன்றைய ராசி பலன்கள்

தேதி: 06.12.2019

மேஷம் :
வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சி செய்து வெற்றி உண்டாகும்.வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நிர்வாக திறமைகள் வெளிப்படும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

அஸ்வினி : நன்மைகள் உண்டாகும்.
பரணி : பொருளாதாரம் மேம்படும்.
கிருத்திகை : அனுகூலம் ஏற்படும்.

ரிஷபம் :
உத்தியோகத் துறையில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பொதுச்செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரோகிணி : சேமிப்பு அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : புகழ் பெறுவீர்கள்.

மிதுனம் :
தொழில்துறையில் உள்ளவர்கள் நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பணியில் சக ஊழியர்களால் மனநிம்மதி ஏற்படும். கெளரவ பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும். தந்தைவழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : வார்த்தைகளில் கவனம் தேவை.

கடகம் :
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வார்த்தைப் போரில் ஈடுபட வேண்டாம். உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய நபர்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். உடைமைகளில் பொருட்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

புனர்பூசம் : அனுகூலமான நாள்.
பூசம் : அலைச்சல்கள் ஏற்படும்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

சிம்மம் :
உத்தியோகத் துறையில் உள்ளவர்கள் சக ஊழியரிடம் பழகும்போது கவனம் தேவை. செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். எண்ணிய செயலை செய்து முடிப்பதில் சில கால தாமதம் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகள் செய்வதில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : காலவிரயம் ஏற்படும்.
பூரம் : கவனமாக செயல்படவும்.
உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும்.

கன்னி :
கணவன் மனைவிக்கு இடையே இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கைக்கு வரும்.பணியில் ஒருவிதமான குழப்பமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : வெள்ளை நிறம்
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : குழப்பமான சூழல் ஏற்படும்.

துலாம் :
புதிய மனை வாங்குவது தொடர்பான முடிவுகள் வெற்றியாகும்.
தொழில் சம்பந்தமான முடிவுகளில் உறவுகளின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் இனிதே நடைபெறும். பணியில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

சித்திரை : முயற்சி வெற்றி ஆகும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : சிந்தனைகள் உருவாகும்.

விருச்சிகம் :
பொருளாதாரம் முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். செய்கின்ற பணியில் திருப்தியான சூழ்நிலை அமையும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். பயணங்கள் தொடர்பான செயல்களில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

விசாகம் : உயர்வு உண்டாகும்.
அனுஷம் : எதிர்ப்புகள் விலகும்.
கேட்டை : வெற்றி உண்டாகும்.

தனுசு :
வியாபாரத்தில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களிடம் கவனமாக செயல்படவும்.குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் மேன்மையான சூழ்நிலை அமையும். நண்பர்களிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் அகலும். பூமி விருத்திக்கான பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : சுபமான நாள்.
பூராடம் : மனச் சஞ்சலம் விலகும்.
உத்திராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.

மகரம் :
பொன் பொருள் தன சேர்க்கை உண்டாகும். தம்பதிகளுக்கிடையே புரிதல் உணர்வு அதிகரிக்கும். கூட்டாளிகளால் பொருள் இலாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் சுபிட்சம் உண்டாகும். சம வயதினரால் நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : புரிந்து செயல்படுவீர்.
திருவோணம் : சேமிப்பு உயரும்.
அவிட்டம் : நன்மை உண்டாகும்.

கும்பம் :
உடல்நலத்தில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும்.
செய்கின்ற பணியில் இடமாற்றம் ஏற்படலாம். குடும்ப
உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாலின மக்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.எண்ணிய செயலை முடிப்பதில் துரிதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : இடமாறுதல் ஏற்படலாம்.
சதயம் : இன்னல்கள் குறையும்.
பூரட்டாதி : உடல் நலம் சீராகும்.

மீனம் :
வெளியூர் பயணங்களில் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும்.
கலை சம்பந்தமான அறிவால் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : ஜெயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : சந்தோசமான சூழல் ஏற்படும்.
ரேவதி : சிந்தனைகள் வெற்றி பெறும்.

ஜோதிடர்: சிவஸ்ரீ த. ஸ்ரீமுருகன் குருக்கள்.

Previous articleநித்தியின் விலாசம் – கைலாசம் கொண்டாட்டத்தில் பக்தர்கள்
Next articleபிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: பெரும் பரபரப்பு