நடுவானில் செல்லும் போது விமானிக்கு ஏற்பட்ட பாதிப்பு! அவசரமாக தரை இறங்கிய விமானம்!

Photo of author

By Hasini

நடுவானில் செல்லும் போது விமானிக்கு ஏற்பட்ட பாதிப்பு! அவசரமாக தரை இறங்கிய விமானம்!

வங்கதேச விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த விமானம் இந்திய எல்லைக்குள் அருகே வந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை தரை இறக்க வேண்டிய அவசியம் என்று கோரி மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

ஆனால் விமானம் ராய்ப்பூர் அருகில் இருந்ததால் அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அதோடு கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு தளத்திலிருந்து நாக்பூர் விமான கட்டுப்பாட்டு தளத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வங்கதேச விமானியும் இதுதொடர்பாக நாக்பூர் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதன் காரணமாக நாக்பூர் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது. அதன் காரணமாக விமானம் பத்திரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரை இறங்கியது. உடனே விமானத்திலிருந்து விமானியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மற்றொரு விமானி சாதுரியமாக விமானத்தை தரையிறக்கியதன் காரணமாக, 126 பயணிகளும் உயிர் தப்பினர்.

மேலும் விமானிக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு அதே விமானம் மூலம் மீண்டும் டாக்கா  திரும்பினார். இந்தியாவில் இருந்து சில மணி நேரத்தில் டாக்கா சென்றுவிடும் என்பதன் காரணமாக விமானி அந்த விமானம் மூலமே சொந்த நாட்டிற்கு சென்று விட்டார். கொரோனா தொற்றின் காரணமாக குறிப்பிட்ட அந்த வங்க தேச விமான நிறுவனம் இந்தியாவுக்காக விமான சேவைகளை நிறுத்தியிருந்தது. சமீபத்தில்தான் அந்நிறுவனம் தனது சேவையை இந்தியாவுக்கு தொடங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.