கருவளையம் உங்கள் அழகை கெடுக்கிறதா? உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்..!

Photo of author

By Janani

சிலரின் கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். அதற்கு உணவு முறை, மன உளைச்சல், சத்து குறைப்பாடு என பல காரணங்கள் இருக்கும்.ஆனால், அப்படி தோன்றும் கருவளையத்தால் தங்களின் அழகு குறைப்பாடு ஏற்படுவதாக கருதுகின்றனர்.அவற்றை தடுக்க செயற்கை அழகு பொருட்களை பயன்படுத்தாமல் சித்த மருந்துகளை வைத்து எளிதாக நீக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுவோம்.

ஜாதிக்காய்:

ஜாதிக்காயை பொடித்து கொள்ளவும் அதனுடன் பாதம் விழுதை சேர்த்து கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கல். அதன்பின், முகத்தில் தடவி 2 மணி நேரம் கழித்து கழுவிக்கொள்ளவும். இந்த பேஸ்பேக்கை போட்டு வர முகத்தில் உள்ள கருமை, கரும்புள்ளிகள் நீங்கும்.

கற்றாழை :

கற்றாழையுடன் எலுமிச்சை சாறு சேர்ந்து கலந்து கொள்ளவும்.இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள்.இதனை வாரம் இரண்டு முறை செய்து வர வெயிலால் ஏற்படும் கருமை நீங்குவதோடு கருவளையம் நீங்கும்.

குங்குமாதிலேபம் :

இதனை தூங்க செல்வதற்கு முன்பு முகத்தில் பூசி மசாஜ் செய்து கொள்ளவும்.காலையில் தூங்கி எழுந்ததும் முகத்தை கழுவி வர முகத்தில் உள்ள கருமை நீங்கும். (குங்குமாதிலேபம் சித்த மருத்துவகடைகளில் கிடைக்கும்).

அதேபோல காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்து கொள்ளவும். நிறைய தண்ணீர் எடுத்து கொள்ளவும்.