வாழ்ந்தா மாமியார் கூட தான் வாழ்வேன்.. கணவருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்.. என்ன கொடுமை சார் இது??

Photo of author

By Sakthi

வாழ்ந்தா மாமியார் கூட தான் வாழ்வேன்.. கணவருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண்.. என்ன கொடுமை சார் இது??
பொதுவாக திருமணமான தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது வழக்கம். அப்படி இல்லை என்றால் வரதட்சணை கொடுமை இன்னும் சில காரணங்கள் என கூறலாம். ஆனால் இங்கு ஒரு வினோதமான வழக்கு நடந்துள்ளது. அதை கேட்டு பலரும் ஷாக்காகி உள்ளனர். பெரும்பாலும் மாமியாருடன் மருமகன் நெருக்கம் என்பது போன்ற செய்திகளை தான் நாம் படித்திருப்போம்.
ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தன் மாமியாரை காதலிப்பதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார். அதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மாமியார் இதுகுறித்து தனது மருமகள் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஒரே மகனுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஆனால் எங்கள் மருமகள் வீட்டிற்கு வந்த உடனேயே என்னை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமல்ல என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து என்னை வலியுறுத்தி வருகிறார். என்னை பார்த்த உடனேயே என் மீது காதல் வயப்பட்டு விட்டாராம்.
ஊருக்காக மட்டுமே என் மகனை திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார். உண்மையில் என் மருமகள் என்னுடன் தான் வாழ ஆசைப்படுகிறார். அதுமட்டுமல்ல நான் என் கணவருடன் சேர்ந்து வாழ கூடாது என்று கூறி என்னை மிரட்டுகிறார். கேட்டால் நான் அவருக்கு மட்டும் தான் சொந்தம் என்று கூறுகிறார். தொடர்ந்து என்
மருமகள் என்னுடன் வலுக்கட்டாயமாக நெருக்கமாக இருக்க முயற்சி செய்கிறார்.
அந்த சமயத்தில் அவளுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தால் என்னை அடிப்பேன் என மிரட்டுகிறாள். எங்கள் இருவருக்கும் இடையே மாமியார் மற்றும் மருமகள் உறவு இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். அவள் மீது பாசமும் வைத்துள்ளேன். ஆனால், அதை அவர் வேறு மாதிரி பயன்படுத்த பார்க்கிறார். இது தவறு என்று கூறினால் அதெல்லாம் தப்பில்லை என்று ஆபாச வீடியோக்களை காட்டுகிறார்.
இதனால் என் மகனுக்கு விவாகரத்து வாங்கி விடலாம் என்று கூட யோசித்து இருக்கிறேன். ஆனால், விவாகரத்து என்று சொன்னாலே பதிலுக்கு வரதட்சணை புகார் அளிக்கப்போவதாக மருமகள் மிரட்டுகிறார்” என குறிப்பிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த கணவரும் மிகவும் மனமுடைந்து காணப்படுகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.