காரில் சென்ற தந்தையை தாக்கிய மகள்கள்! கள்ள காதலினால் ஏற்பட்ட பரிதாபம்!

காரில் சென்ற தந்தையை தாக்கிய மகள்கள்! கள்ள காதலினால் ஏற்பட்ட பரிதாபம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாராவில் உள்ள ஹனுமார் நகரில் உள்ள குசல்வாரா சாலை அருகே இரண்டு சிறுமிகள் ஒரு காரை மறித்து நிறுத்தினர். ஆனால் அந்த கார் நிற்காமல் அவர்களை தாண்டி சென்று உள்ளது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் வம்படியாக காரை நிறுத்தி உள்ளனர். உடனடியாக அந்த சிறுமிகள் காரில் இருந்த ஆண், பெண் இருவரையும் மிக பயங்கரமாக தாக்கினர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரப்பப்பட்டு வருகிறது. அவர்கள் அந்த நபரை தாக்கும் போது இரண்டு மகள்கள் இருக்கும் போது வேறு ஒரு பெண்ணுடன் காதல் தேவையா? உனக்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்டுக் கொண்டே அடித்துள்ளனர்.

இதைப் பற்றி அந்த பகுதி மக்கள் அந்த குழந்தைகளிடம் கேட்ட போது, அது தங்களது தந்தை என்றும், வேறு ஒரு பெண்ணுடன் தந்தை இயற்கையை மீறி ஏற்படுத்திய தொடர்பின் காரணமாக வீட்டின் அமைதியே குறைந்துவிட்டது என்றும், இதனால் தங்களது தாய் மிகவும் கஷ்டத்தை அனுபவிப்பதாகவும், வாழ்க்கையை கடுமையாக பாதிக்கப் பட்டு விட்டதாகவும், அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது குறித்து இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப் படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment