8வது நாள் ஆசிய விளையாட்டு போட்டிகள்!!! இந்தியாவுக்கு மூன்று தங்க பதக்கம்!!!
நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் கடந்த செப்டம்பர23ம் தேதி தொடங்கிய நடைபெற்று வரும் நிலையில் 8ம் நாளான நேற்று(அக்டோபர்1) ஒரே நாளில் இந்தியாவுக்கு மூன்று தங்க பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்று கொடுத்துள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டிகள் 8வது நாளான நேற்று(அக்டோபர்1) 3000 மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் அவினாஷ் சாப்ளே அவர்கள் 8 நிமிடம் 19.50 விநாடிகளில் 3000 மீட்டரை கடந்து முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
அதே போல நேற்று(அக்டோபர்1) ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த தஜிந்தர் பால் சிங் அவர்கள் 20.36 மீட்டர் தூரம் குண்டு எறிந்தார். இதன் மூலமாக அதிக தூரம் குண்டு எறிந்ததால் தஜிந்தர் பால் சிங் அவர்கள் தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும் நேற்று(அக்டோபர்1) ஆடவர் அணிக்கான துப்பாக்கி சுடுதல் டிராப் போட்டி நடைபெற்றது. இந்த ஆடவர் அணி துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவு போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான், கியானன் செனாய், ஜொராவர் சிங் சாந்து ஆகியோர் 361 புள்ளிகள் குவித்தார். இதன். மூலமாக இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்தது.
தங்கப் பதக்கம் மட்டுமில்லாமல் இந்தியா நேற்று வெள்ளி, வெண்கலம் என்று மேலும் பதக்கங்களை வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிர் பிரிவில் மணீஷ் கீர், பிரீத்தி ரஜாக், ராஜேஸ்வரி குமாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 337 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுது.
கோல்ஃப் போட்ட்யில் மகளிர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அதிதி ஆரோக்கியம் அவர்கள் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த அஜய்குமார் சரோஜ் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த ஜின்சன் ஜான்சன் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த ஹர்மிலன் பெயின்ஸ் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவை சேர்ந்த ஜோதி யார்ராஜி அவர்கள் 100 மீட்டர் தடை ஓட்டத்தை 12.91 விநாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றார். ஆனால் இரண்டாவதாக வந்த சீனாவை சேர்ந்த வீராங்கனை யானி வூ அவர்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டார். இதனால் மூன்றாவதாக வந்த இந்தியாவை சேர்ந்த ஜோதி யார்ராஜிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.
ஆடவருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் முரளி ஸ்ரீசங்கர் அவர்கள் 8.19 மீட்டர் நீளம் தாண்டி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை 58.62 மீட்டர் தூரம் வட்டை எறிந்து மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். மேலும் மகளிருக்கான ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை நந்தினி அகாசரா அவர்கள் வெண்கலம் வென்றார்.
மேலும் மகளிருக்கான குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை நிகர் ஜரீன் அவர்கள் தாய்லாந்தை சேர்ந்த ரகாஸ்த் சுத்தாமத் அவர்களிடம் 1-2 என்ற கணக்கில் தாதாவாக அடைந்து வெண்கலம் வென்றார். ஆக எட்டாவது நாளின் முடிவில் இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் 4வது இடத்தில் இருக்கின்றது.