இங்கிலாந்திற்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி

Photo of author

By Sakthi

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 192 ஆட்டம் இழந்தது. ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து இருக்கிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கின்றன. ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது இந்த நிலையில், 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் முக்கிய வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை ரோகித் சர்மா 11 ரன்கள் மற்றும் லோகேஷ் ராகுல் 17 ரன்கள், புஜாரா 4 ரன்கள் என்று அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின்னர் அணியின் கேப்டன் விராட் கோலி, ரவீந்தர் ஜடேஜா உள்ளிட்ட இருவரும் மிக நிதானமாக விளையாடி ரன் சேர்க்க தொடங்கினார்கள்.

ஜடேஜா 10 ரன்னில் ஆட்டமிழக்க கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து இருந்த நிலையில், ராபின்சன் ஓவரில் தன்னுடைய ஆட்டத்தை இழந்தார். அதன் பிறகு வந்த வீரர்களும் அணியின் ஸ்கோரை உயர்த்த இயலாமல் தடுமாறித்தான் போனார் ரஹானே 14 ரன்னிலும், ரிஷப் பண்ட் 9 ரன்னிலும், பெவிலியன் திரும்பினார்கள்.

இப்படியான நெருக்கடியான சூழ்நிலையிலும் மிக நேர்த்தியாகவும் அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாகூர் 37 பந்துகளில் அரைசதம் அடித்து நம்பிக்கை கொடுத்தார். இருந்தாலும் அவர் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக வோக்சிடம் தன்னுடைய விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இதன் பிறகு பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும், உமேஷ் யாதவ் 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 3 விக்கெட்டுகள் வோக்ஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் மிக விரைவில் வெளியேறினார்கள். இதனைத் தொடர்ந்து டேவிட் மிலானுடன் கேப்டன் ஜோ ரூட் இணைந்த இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜோ ரூட் 21 ரன்கள் எடுத்த சமயத்தில் உமேஷ் யாதவிடம் ஸ்டம்ப்வுட் ஆனார்.

கடைசியில் முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்ட நேர இறுதியில் மலான் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இந்திய அணியின் சார்பாக தூம் 2 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் எடுத்திருக்கிறார்கள்.