தரித்திரம் வராமல் தடுக்க கட்டாயம் இந்த நாட்களில் முடி, நகம் வெட்டாதீர்கள்..!!

0
229
nails and hair cutting days

நம் வீட்டில் நாம் முடி வெட்ட வேண்டும் என்று கூறினால் உடனே இந்த நாட்களில் முடி வெட்டாதே வீட்டிற்கு ஆகாது என கூறுவார்கள். நகம் வெட்டினாலும் அவ்வாறு தான் கூறுவார்கள். வீட்டிற்குள் வைத்து நகம் வெட்டாதே, இன்னை வெட்ட வேண்டாம். என்று எல்லாம் சொல்வார்கள். ஏன் என்று கேட்டால் குடும்பத்திற்கு ஆகாது. அதனால் முடி வெட்ட வேண்டாம் என கூறுவார்கள். இதனை நாம் கேட்கும் போது முடி, நகம் வெட்டுவதற்கும் நாட்களுக்கும் என்ன சம்பந்தம் என நமக்கு தோன்றும்.

ஒரு நல்ல விஷம் செய்வதற்கு மட்டும் நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம், கிழமை பார்த்து ஒவ்வொரு விஷயமும் பார்த்து, பார்த்து செய்வோம். அது போல இந்த நகம், முடி வெட்டுவதற்கும் நாட்கள் பார்த்து வெட்ட வேண்டும் என ஏன் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

முடி, நகம் வெட்டக்கூடாத நாட்கள்

நமது முன்னோர்கள் இந்து சாஸ்திரங்களை வகுத்து வைத்துள்ளனர். அதன்படி செவ்வாய்க்கிழமை நாட்களில் கட்டாயம் முடி வெட்டவோ, நகம் வெட்டவோ கூடாது. செவ்வாய்க்கிழமை செவ்வாய் கிரகத்தின் முழு ஆதிக்கம் உடைய நாளாக இருக்கும் என்று கூறுவார்கள். வீட்டில் உள்ளவர்கள் இறந்தால் இந்த முடியை வெட்ட செய்வார்கள். அவ்வாறு முடிக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பொதுவாக எந்த ஒரு நல்ல காரியத்தையும் செவ்வாய்க்கிழமை செய்யமாட்டார்கள். அதற்காக நகம், முடி கூடவா வெட்ட கூடாது என கேட்பார்கள்.

ஏனென்றால் செவ்வாய்க்கிழமையில் செவ்வாயின் வீரியம் அதிகமாக இருப்பதால் முடி வெட்டும் போதோ, நகம் வெட்டும் போதோ ஏதேனும் விபரீதம் ஏற்படலாம். எனவே இந்த நாட்களில் வெட்ட வேண்டாம் என கூறுவார்கள்.

வெள்ளிக்கிழமை மகாலெட்சுமிக்கு உகந்த நாட்களாக கருதப்படுவதால் அன்றைய தினம் நாம் எதையும் இழக்க கூடாது என கூறுவார்கள். எந்த ஒரு பொருளும் வாங்கினாலும் வெள்ளிக்கிழமை அன்று பார்த்து வாங்கும் போது, நகம், முடி வெட்டி எதையும் இழக்க கூடாது என கூறுவார்கள்.

சனிக்கிழமை முடி, நகம் திருத்தம் செய்ய கூடாது. சனிப்பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள் என்பதால், அன்றைய தினம் சனி கிரகத்தின் கதிர்கள் அதிக வீரியம் கொண்டவையாக பார்க்கப்படுகிறது. எனவே அன்றைய தினமும் முடி, நகம் வெட்டக்கூடாது.

மற்ற நாட்களில் முடி, நகம் வெட்டிக்கொள்ளலாம் (nails and hair cutting days). அது போல ஆடி மாதம், மார்கழி மாதம், புரட்டாசி மாதம் முடி வெட்ட கூடாது என கூறுவார்கள். மேலும் குலத்தெய்வத்திற்கு அல்லது வேறு ஏதாவது தெய்வத்திற்கு முடி வெட்ட நேர்த்தி கடன் இருந்தால் நீங்கள் அன்றைய தினம் முடி வெட்டிக்கொள்ளலாம். செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் முடி, நகம் வெட்டுவதை தவிர்த்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: அது என்ன கவரிமான் பரம்பரை? ஒரு முடி உதிர்ந்தாலும் இறந்துவிடும் இந்த கவரிமான்?