ஆதார் அட்டையில் இத உடனே பண்ணுங்க; ஜூன் 14 வரை மட்டுமே டைம்!!

0
6

ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணமாக மாறி உள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள முகவரி உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலமாக இலவசமாக புதுப்பிப்பதற்காக ஜூன் 14ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு எந்த ஒரு புதுப்பிப்புகள் செய்தாலும் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து யூனிட் ஐடென்டிபிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆதார் பதிவு செய்த நாளில் இருந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அடையாள ஆவணங்கள் மற்றும் முகவரி ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும்.

இதன் மூலம் ஆதார் விவரங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு துல்லியமாக இருக்கும் என்பதால் இந்த புதுப்பிப்பை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் ஜூன் 14ஆம் தேதி வரை எந்த தகவல் மாற்றத்தையும் செய்து கொள்ளலாம். அதற்கு அருகே உள்ள ஆதார் மையத்திற்கு சென்று 50 ரூபாய் கட்டணத்துடன் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் ஆதார் அட்டையில் விரல் ரேகை , கண் நார் ஸ்கேன் மற்றும் புகைப்படம் ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது இதற்கு ஆதாரம் மையத்திற்கே செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

ஆதாரில் புதுப்பிப்பு செய்ய விரும்புபவர்கள் ஜூன் 14ஆம் தேதிக்குள் அதனை செய்து முடிக்க வேண்டும் இல்லையெனில் கட்டணம் செலுத்தி ஆதார் மையத்திற்கு நேரில் சென்று புதுப்பிக்க வேண்டும் என்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர். அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை முக்கிய ஒன்றாக உள்ள நிலையில் உடனே அப்டேட் செய்வது அவசியம்.

Previous articleபொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; உடனே விண்ணப்பியுங்கள்!!
Next articleமாணவிகளுக்கு அரசு அறிவித்த அசத்தல் அப்டேட்; மாதம் தோறும் 1000 பெறுவது எப்படி தெரியுமா!!