கெடு விதித்த வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு! என்ன செய்யப்போகிறது மத்திய அரசு!

Photo of author

By Sakthi

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்து வரும் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய தனியுரிமை கொள்கைகளையும் பயன்பாட்டு விதிமுறைகளை மாற்றி அமைத்து இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தன்னுடைய பயனாளிகள் தொடர்பான தகவலை சேகரித்து பேஸ்புக்கில் இருவரும் பகிர்ந்து கொள்வதற்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவித்தது

இதை பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதிக்குள் அனைத்து பயனர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இல்லை என்றால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த இயலாது என்றும், அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்த புதிய தனியுரிமைக் கொள்கையை பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதிக்குள் எல்லா பயனர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இல்லை என்றால் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த இயலாது என்றும், அந்த நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. இது தொடர்பாக வாட்ஸ்அப் பயனர்கள் குழப்பம் அடைந்ததைத் தொடர்ந்து இந்த தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்துவதை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில், அரசாங்கத்தின் மேற்பார்வை இன்றி வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை வேறு ஒரு நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்வதன் காரணமாக, இது தனியுரிமை விதி மீறல் என்றும், இதன் காரணமாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம் விதிமுறைகளுக்கு உடன்படவில்லை என்றால் வேறு செயலிகளை உபயோகப்படுத்துங்கள் என்று தெரிவித்தது. அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தனியுரிமைக் கொள்கையை கட்டாயப்படுத்துவது வாட்ஸ்அப் நிறுத்தி வைத்து இருக்கிறது. அதோடு ஒரு சில மாற்றங்களை செய்திருப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில், மே மாதம் 15ஆம் தேதிக்குள் தனியுரிமைக் கொள்கையை பயனர்கள் ஏற்க கெடு விதித்து இருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம். அப்படி ஏற்காவிட்டால் மே மாதம் 16ஆம் தேதி முதல் நோட்டிபிகேஷன் மற்றும் அழைப்புகள் வரும் ஆனால் செய்திகளை அனுப்பவும், வரும் செய்திகளை படித்து பார்க்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 120 நாட்களுக்கு பின்னர் பயனர்களின் கணக்கு முழுமையாக முடக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.