ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயரிழப்பு!ஹை-கோர்ட் கண்டனம்!
இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனாவின் இரண்டாவது அலையின் உச்ச கட்ட பாதிப்பினால் பல மறக்க முடியாத உயிரிழப்புகளை சந்தித்து வருகிறோம்.திரைத்துறையினர்,அரசியல் பிரமுகர்கள், இசையமைப்பாளர்கள், பொது மக்கள்,நாடக கலைஞர்கள் என யாரையும் கொரோனா வானது விட்டு வைப்பதில்லை.அதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இந்தியா முழுவதிலும் தலைவிரித்து ஆடுகிறது.வயது மூப்பு உள்ளோரையும்,சிறுவயது குழந்தைகளையும் இந்த இரண்டாவது கொரோனா அலையின் தாக்கம் மிகவும் பாதிக்கிறது.அதிலும் தினசரி பாதிப்புகள் 4 லட்சம் வரை எட்டி உள்ளது.கொரோனா அதிகஅளவில் பரவுவதால் இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரிய அளவில் மக்களை பாதிக்கிறது.
ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கின் மூலம் கருத்து சொன்ன அலகாபாத் உயர் நீதிமன்றம்,ஆக்சிஜன் பற்றாக்குறையால் பொது மக்கள் உயிரிழக்கும் சம்பவம் ஒரு இனப்படுகொலைக்கு நிகரானது என கடுமை தெரிவித்துள்ளது.மேலும் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் மருத்துவ வசதிகள் மேம்பட்ட சமுதாயத்தில் இந்த நிலையில் இருக்கும் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் அவலநிலையை எப்படி அனுமதிக்க முடியும்? என கேள்வியும் எழுப்பி உள்ளது.