Chennai: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஒரு நோயாளி உயிரிழந்ததற்கு காரணம் மருத்துவர்கள் என கூறி உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று இரவு கிண்டி மருத்துவமனையில் சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பித்தப்பை கல் பிரச்சினை உள்ளது என உறவினர்களிடையே தெரிவித்தார்கள். அவரது உடல் நலம் மோசமாக இருந்த நிலையில், அப்போது அவரை சிகிச்சைக்காக அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு அனைத்து சிகிச்சைகளும் முறையாக நடைபெற்றது. இருந்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்துவிட்டார். ஆனால் விக்னேஷ் உறவினர்கள் இந்த இறப்புக்கு மருத்துவர்கள் பணியில் இல்லாதது தான் காரணம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் அவர் ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் பித்தப்பை கல் சிகிச்சை பெற்று உள்ளார்.
பிறகு இந்த நோய் தீவிரமடைந்ததால் தான் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்னேஷ் அனுமதிக்கபட்ட அன்று அவருக்கு முறையாக நடக்க வேண்டிய சிகிச்சைகள் அனைத்தும் நடந்தன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அன்று அனைத்து மருத்துவர்களும் பணியில் இருந்தார்கள் என கூறியுள்ளனர்.