இரண்டாவது முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்!!! இங்கிலாந்து வீராங்கனை படைத்த சாதனை!!!
நேற்று (ஆகஸ்ட்31) இங்கிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதும் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக வீராங்கனை மஹிகா கவுர் அவர்கள் அறிமுகமாகி சாதனை படைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான வீராங்கனை மஹிகா கவுர் அவர்கள் 12 வயதில் முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் கிரிக்கெட் அணிக்காக முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இடது கை மீடியம் பந்துவீச்சாளரான வீராங்கனை மஹிகா கவுர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்பொழுது இலங்கை அணியுடனான தொடரில் இங்கிலாந்து நாட்டுக்காக இரண்டாவது முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் டி20 தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் இலங்கை மகளிர் அணியும் இங்கிலாந்து மகளிர் அணியும் மோதும் டி20 தொடரின் முதல் போட்டி நேற்று(ஆகஸ்ட்31) நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் குறுக்கே மழை பெய்ததால் 20 ஓவர்கள் கொண்ட போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 17 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இலங்கை மகளிர் அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து 187 ரன்களை இலக்காகக் கொண்டு இலங்கை மகளிர் அணி களமிறங்கியது. இலங்கை மகளிர் அணி 6 ஓவர்களின் முடிவில் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்தது. மழை நிற்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மழை நிற்காததால் டக்வெர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலமாக இங்கிலாந்து அணி முதல் டி20 போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் இரண்டு ஓவர்களை வீசிய இங்கிலாந்து வீராங்கனை மஹிகா கவுர் 16 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் வீராங்கனை மஹிகா கவுர் இங்கிலாந்து நாட்டுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.
இதற்கு முன்பாக இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் ஜோப்ரா ஆர்ச்சர் அவர்கள் முன்பு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.