Dec 19 தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை! உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!
கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது வரை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதவாறு:
தெற்கு அந்தமானை ஒட்டிய வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும்,இந்த தாழ்வு பகுதியானது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம் மற்றும் காரைக்கால் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் 18-ம் தேதி வரை ஆங்காங்கே மழை பெய்யும் என்றும்,இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று புயலாக மாறினால் தமிழகத்தில் டிசம்பர் 19ஆம் தேதி பல இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.