மிகவும் மன வேதனையடைந்தேன்! தஞ்சை தேர் விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி!

Photo of author

By Sakthi

தஞ்சை அருகே களிமேடு என்ற கிராமத்தில் அப்பர் குருபூஜை சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று அதிகாலை நடந்தது. அந்த சமயத்தில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது இதன் காரணமாக, ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலியானார்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சூழ்நிலையில், தஞ்சாவூர் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்கள். இதில் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் திருத்தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவத்தால் மிகுந்த மனவேதனையடைந்தேன்.

இந்த துக்கமான சமயத்தில் உறவுகளை இழந்த குடும்பத்தினருடன் என்னுடைய எண்ணங்கள் இருக்கின்றன. காயமடைந்தவர்கள் மிக விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

தஞ்சாவூர் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும், அவர் கூறியிருக்கிறார்.

காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக, வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் தேர் திருவிழாவில் உண்டான விபத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் தற்சமயம் வெளியிடப்பட்டிருக்கின்ற பதிவு தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உட்பட பலர் பலியான சம்பவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருக்கிறார்.