எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு! ஹை கோர்ட் சொன்ன கருத்து!
பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான ஒரு கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அது மக்களிடையே மிக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரோ, அதில் சிக்காமல் தப்பித்துக் கொண்டே வந்தார். ஒவ்வொரு முறையும் அதற்காக தலைமறைவாகிவிட்டார்.
பொதுவாக பிரபலம் என்றாலே சொல்வதெல்லாம் சொல்லிவிட்டு அதிலிருந்து ஜகா வாங்குவது நடைமுறைதான். ஆனால் இவர் அரசியல் பிரமுகர் வேறு. எனவே சொல்ல வேண்டிய கமெண்டையும் சொல்லிவிட்டு, தற்போது அந்த வழக்கில் தெரியாமல் செய்ததாக கூறி வாபஸ் பெற நினைக்கிறார்.
தமிழக அரசும் அதன் பிறகு அதை கவனிக்கவில்லை. தற்போது அவர் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி நிஷா பானு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி சேகர் தரப்பில் ஆஜரான வக்கீல், அந்த பதிவை அவர் படிக்காமலேயே பிறருக்கு பகிர்ந்து விட்டார். அதாவது பார்வேர்ட் செய்துள்ளார் என்றும், அதற்கு தற்போது மன்னிப்பு கோரியுள்ளார் என்றும், தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி பதிவை படிக்காமல் ஏன் பிறருக்கு அனுப்புகிறீர்கள்? என்றும், அதன் பின் செய்யும் செயலை செய்துவிட்டு அதன் பின் அதற்கு மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தியும் வைத்துள்ளார்.