Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவை கண்டிப்பாக தோற்கடிப்போம்!! பிரையன் லாரா நம்பிக்கை!!

Defeat India for sure!! BRIAN LAURA HOPE!!

Defeat India for sure!! BRIAN LAURA HOPE!!

இந்தியாவை கண்டிப்பாக தோற்கடிப்போம்!! பிரையன் லாரா நம்பிக்கை!!

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி அங்கு இரண்டு டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

நாளை முதல் 16 ஆம் தேதி வரை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது டொமினிகா மைதானத்தில் நடைபெறும்.

இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேப்டனாக ரோகித் ஷர்மா, துணை கேப்டனாக அஜின்க்யா ரஹானே, விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத், இஷான் கிஷன், சுப்மன் கில், ருத்துராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான விவரம் வெளியிடப்பட்டது. அதில் கிரேக் பிராத்வைத் கேப்டனாகவும், ஜெர்மைன் பிளாக்வுட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதில் அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம், கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கன்சிஃப், கெமர் ரோச், ஜோமேல் வாரிக்கன் மற்றும் ரேமன் ரைஃபர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் வெற்றிப்பாதைக்கு செல்லும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கூறி உள்ளார்.

இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை முதலாவது வெளியூர் போட்டியில் விளையாட இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் தனது முதல் டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது.

இந்த போட்டியில் தான் இந்தியாவை வெஸ்ட் இண்டீஸ் தோற்கடிக்கும் என்று இவர் கூறி உள்ளார். இளம் வீரர்களை உள்ளடக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டியில் தனது முழு வேகத்தையும் வெளிப்படுத்தும் என்றும் மேலும், வீர்கள் எந்த வயதில் இருந்தாலும் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையை எப்போதுமே வகுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரையன் லாரா கூறி உள்ளார்.

Exit mobile version