முக்கிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய பாதுகாப்பு அமைச்சகம்! சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆணவத்திற்கு போடப்பட்ட கடிவாளம்!

0
127

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாக இருந்து வந்திருக்கின்றன.பாகிஸ்தான் என்பது நம்முடைய பலகால எதிரி நாடு என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் சீனா அப்படியல்ல சீனாவைப் பொறுத்தவரையில் ஒருபுறம் நம்முடைய தலையை தடவிக் கொடுத்துக் கொண்டே மறுபுறம் முதுகில் குத்தி விடலாம் என்று நினைக்கும் சாதுரியம் மிக்க நாடாக அந்த நாடு விளங்கி வருகிறது.

அதோடு சீனா பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பது நமக்கு இன்னும் தலைவலியை கொடுத்து வருகிறது.என்னதான் பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருந்தாலும் கூட நம்மிடம் அவர்கள் மோதுவது என்பது நடக்காத காரியம் அப்படி மோதினால் நமக்கு சற்று சேதம் ஏற்பட்டாலும் நம்முடைய நட்பு நாடுகள் அனைத்தும் இதனை பார்த்துக்கொண்டு இருக்காது என்பது சீனாவிற்கு நன்றாக தெரியும்.

இந்த வருடத்தில் சீனா, பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளின் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை கண்காணிப்பு செயற்கைக்கோள் அமைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

4000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படவிருக்கும் இந்தத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்திய கடற்படை மற்றும் விமானப் படைகள் ஏற்கனவே சொந்தமாக கண்காணிப்பு செயற்கைகோளை அமைத்திருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தற்சமயம் இந்திய ராணுவமும் இந்த திறனை அடைவதற்காக இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.ஜீசாட் 7 பி செயற்கைக்கோள் மூலமாக முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் நடந்த பாதுகாப்பு துறைக்கான கவுன்சில் கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது.சென்ற 2020 ஆம் வருடம் முதல் சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ட்ரோன்கள் உள்ளிட்ட ஊடுருவல்களை கண்காணிக்கும் பணியை வலுபடுவதுடன் திறன்களை மேம்படுத்துவதிலும் இந்திய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஉக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!
Next articleகாதலன் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை! ராசிபுரம் அருகே சோகம்!