டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து! பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு!

0
197

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலை 3 மாடி வணிக கட்டிடத்தில் உண்டான தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. கட்டிடத்திலிருந்து சுமார் 50 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

அதோடு வளர்ச்சிக்கு இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதோடு காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், இந்த விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்திருக்கிறது. அதோடு 3 மாடி கட்டிடத்தில் உண்டான இந்த தீ விபத்தில் இதுவரையில் 27 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன எனவும், 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், டெல்லி வணிக கட்டிட தீ விபத்தில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார்.

Previous articleமாவட்ட சுகாதார சங்கத்தில் அரசு வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
Next articleபணிகளை தொடங்கிய இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? பிரதமருக்கு சவால்விட்ட கட்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here