நோய் தொற்று பாதிப்பு எதிரொலி! டெல்லியில் அமலானது இரவு நேர ஊரடங்கு!

Photo of author

By Sakthi

நோய் தொற்று பாதிப்பு எதிரொலி! டெல்லியில் அமலானது இரவு நேர ஊரடங்கு!

Sakthi

தலைநகர் டெல்லியில் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழ்நிலையில், சமீப காலமாக இந்த நோய் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தலைநகர் புதுடெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. டெல்லியில் புதிதாக 290 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதியில் இருந்து ஒப்பிட்டு பார்த்தோமானால் இந்த எண்ணிக்கை அதிகம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் இந்த நோய்த்தொற்று பாதிப்பால் மோசமாக பாதிப்படைந்து இருக்கிறது.

இதற்கிடையே சென்ற இரண்டு நாட்களில் நாள்தோறும் 200 பேருக்கும் அதிகமாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, டெல்லி மாநில அரசு இரவு நேர ஊரடங்கு விதிக்கும் முடிவை மேற்கொண்டது.

இந்த சூழ்நிலையில், நேற்று இரவு முதல் இந்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கிறது, இதன்படி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரவில் செல்லும் வாகனங்களை பணியில் இருக்கின்ற காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்து அதன் பிறகு அவற்றை செல்ல அனுமதித்து வருகிறார்கள். இரவு நேர ஊரடங்கு காரணமாக, பல சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.