Breaking News

தடுமாறும் டெல்லி.. தவெகவில் இணையும் பாஜகவின் முக்கிய புள்ளி.. விஜய்க்கு கூடும் பலம்..

Delhi is stumbling.. The main point of BJP joining TVK.. Strength for Vijay..

BJP TVK: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளும் வேகமேடுதுள்ளன. மேலும் கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரமடைந்துள்ளன. இவ்வாறான சூழலில் பல முக்கிய பிரமுகர்களும் சொந்த கட்சியை விட்டு மாற்று கட்சியில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்த வகையில், மைத்ரேயன், மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் போன்றோர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து முக்கிய பொறுப்பை வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அதிமுக அதிருப்தி அமைச்சர்கள் பலரையும் தவெகவில் சேர்ப்பேன் என்று கூறியிருந்த நிலையில் அதற்கான வேலைபாடுகளை செய்து வருகிறார். முதலில் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணனையும், மரியமுல் ஆசியாவையும் தவெக வலையில் வீழ்த்திய நிலையில் அடுத்ததாக பாஜகவை சேர்ந்தவர்களையும் சேர்க்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிகிறது. அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் அக்கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க நபராக இருந்தாலும்,  தமிழகத்தில் அண்ணாமலை, நயினார், வானதி ஸ்ரீனிவாசன், போன்றோருக்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதில் இவருக்கு உடன்பாடு இல்லையென்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இவ்வாறு எல்லா இடத்திலும் இவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் கூடிய விரைவில், பாஜகவிலிருந்து விலகி வேறு கட்சியில் சேரும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பயன்படுத்த நினைக்கும் தவெகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்  கிடைத்துள்ளது. தவெக மக்களின் ஆதரவை அதிகளவில் பெற்று வருவதால் பொன். ராதாகிருஷ்ணன் விஜய்யுடன் கை கோர்க்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.