நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று மக்களவையில் முக்கிய மசோதாவை தாக்கல் செய்யும் உள்துறையமைச்சர்!

0
152

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சென்ற மாதம் கூடியது இதில் முதலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று அதன் பிறகு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ம் கட்ட கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஆளும் கட்சியை சார்ந்த அமைச்சர்களும், பிரதமர் அவர்களும் விளக்கமளித்து வருகிறார்கள் அதோடு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

மேலும் தற்போது தமிழக நிதிநிலை அறிக்கையின் கூட்டமும் நடைபெற்று வருகிறது இதன் காரணமாக, தமிழகத்தில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீடு கட்டி தருவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கடந்த 2011 ஆம் வருடத்தில் டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி, வடக்கு டெல்லி, கிழக்கு டெல்லி என்ற 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. 3மாநகராட்சிகளிலும் அடிப்படை பணிகளில் தொய்வு நிலை, ஊழியர்களுக்கு சரியான தேதியில் ஊதியம் கொடுக்க முடியாமை, உள்ளிட்ட நிர்வாக சிக்கல்கள் உண்டாக்கினர்.

இதைத்தொடர்ந்து இந்த சிக்கல்களை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதத்தில் 3 மாநகராட்சிகளில் ஒன்றிணைக்க மத்திய அரசு முடிவுசெய்தது. தலைநகர் புதுடெல்லியிலுள்ள 3 மாநகராட்சிகளில் ஒன்றாக இணைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 23ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதற்கு ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் மாநகராட்சிகளில் ஒன்றிணைக்கும் சட்டத்திருத்த மசோதாவை மத்திய உள்த்துறையமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்யவிருக்கிறார்.

Previous articleசோவியத் ரஷ்யாவிற்கு உதவி புரிந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை!
Next articleஉக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தடாலடியாக அறிவித்த வெளியுறவுத்துறை மந்திரி!