குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி வைக்கிறார். குடியரசு தின விழா காலை 10.30 மணி அளவில் ஆரம்பித்து 12:00 மணி வரை நடைபெற இருக்கிறது.
குடியரசு தின விழா பாதுகாப்பில் 27000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் துணை ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். ஆயுதம் ஏந்திய காவல் துறை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீசார் உள்ளிட்டோர் ஈடுபட இருக்கிறார்கள் இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மற்ற உயர் அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உடன் விழாவை கொண்டாடும் இடத்தை பாதுகாப்பு பணியாளர்கள் பருந்து கண்களுடன் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக முகத்தை அடையாளம் காணும் மின்பொருள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு கருவிகள் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. குடியரசு தின விழா அணிவகுப்பில் 71 டிசிபிக்கள், 213 துணை ஆணையர்கள், 753 ஆய்வாளர்களும் என்று ஒட்டுமொத்தமாக 27, 723 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.
ஆளில்லாத வான்வழி வாகனங்கள் ,சூடான காற்று பலூன்கள் உள்ளிட்ட துணை மரபுவழி வான்வழி படங்களை தலைநகர் டெல்லியில் இயக்குவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு ஜனவரி மாதம் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரையில் இது அமலில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பாதுகாப்பிற்காக எதிர்ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
சென்ற வருடம் குடியரசு தின விழாவின் போது மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் புதுடெல்லியில் டிராக்டர்களில் நுழைந்தார்கள். அவர்கள் காவல்துறையினருடன் மோதிக் கொண்டார்கள் இதனை கருத்தில் கொண்டு கடந்த வருடத்தைப் போல இல்லாமல் இந்த வருடம் டெல்லியில் அனைத்து விதமான முக்கிய எல்லை புள்ளிகளும் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது.
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் மற்றும் சுமூகமான குடியரசு தினவிழாவை உறுதி செய்ய உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருகின்றன.