ராமதாஸ் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டம்.. தமிழக அரசின் முடிவை எதிர்நோக்கும் பாமக!!

0
93
Demonstration led by Ramadoss.. Looking forward to Tamil Nadu government's decision!!
Demonstration led by Ramadoss.. Looking forward to Tamil Nadu government's decision!!

PMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே இருக்கும் நிலையில் கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அதிமுக, திமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாதக தனித்து களம் காண இருக்கும் சமயத்தில், மற்ற கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் தான் பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் உட்கட்சி மோதல் ஏற்பட்டு அது டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராமதாஸ் டெல்லி உயர் நீதி மன்றத்தில் மனு அளிக்க நீதிமன்றம், தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாமகவில் தலைமை போட்டி நிலவி வருவதால், வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வரும் என்பதால், பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து டிசம்பர் 17 ஆம் தேதி பாமகவின் அன்புமணி தலைமையில் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதற்காக திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து வருகிறது அன்புமணி தரப்பு.

மேலும் ராமதாஸ் தலைமையில் இன்று வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் ஜாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த கோரியும் ராமதாஸ் தலைமையில் இன்று சென்னையில் போராட்டம் நடைபெற இருக்கிறது. அமைதியான போராட்டத்தில் எங்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், சிறை செல்வது போல வேறு வகையான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு எந்த மாதிரியான பதிலை அளிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

Previous articleதவெக-வைத்தியலிங்கம்.. அவர் செங்கோட்டையன் மாதிரி இல்ல!! தினகரன் சொல்வதென்ன!!
Next articleதவெக மேலுள்ள பயத்தை வெளிச்சம் போட்டு காட்டிய திமுக.. விஜய் குறித்து மறைமுக விமர்சனம்!!