கொரோனாவுடன் கை கோர்க்கும் மற்றொரு வைரஸ்;?சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது இந்தியா?

0
118

சீனாவிலிருந்து பரவத் தொடங்கி இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாத் தொற்று இன்னும் ஓய்ந்தபாடில்லை.இந்தியாவில் தொற்றுக்கு ஆளானவர்களில் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கும் நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் சீசன் தொடங்கியுள்ளது.ஒரே நேரத்தில் இரு பெரும் ஆபத்தான தொற்று நோய்களை சமாளிக்க வேண்டிய நிலையில் இந்திய சுகாதார துறையும் மக்களும் உள்ளனர்.

2016 – 2019 ஆண்டுகளின் கணக்கெடுப்பில் டெங்கு காய்ச்சலால் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 1 முதல் 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.டெங்கு காய்ச்சல் தென்னிந்தியாவில் பருவமழை காலத்தில் தொடங்கி ஆண்டு முழுவதும் உள்ளது.வட இந்தியாவில் குளிர் காலத்தில் தொடங்குகிறது.

டெங்கு, கொரோனா ஆகிய இரண்டுமே காய்ச்சல் தலைவலி உடல் வலி போன்ற அறிகுறிகளை பொதுவாக கொண்டுள்ளதால் இரண்டு வைரஸ்களும் ஒன்றுக்கொன்று துணை புரியக் கூடும் என்று வல்லுநர்கள் அச்சத்தில் உள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்த இரண்டு தொற்றுகளுக்கும் பல்வேறுபட்ட பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதால் மருத்துவமனைகளிலும் ஆய்வுக் கூடங்களிலும் நெருக்கடி ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் ஒவ்வொரு நோயாளியும் 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்படுகின்ற போது டெங்கு பரிசோதனை பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படும் என்கின்றனர்.

தற்போது நிலையை பார்க்கும் கொரோனாத் தொற்று நோயாளிகள் நிரம்பில் வழியும் இந்த சமயத்தில் டெங்கு நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்குமா என்ற கேள்வியும் ஆராய்ச்சியாளர்களிடம் தோன்றி உள்ளது.
இது இந்தியாவிற்கு மிகப் பெரிய சவாலாக அமையப்போகிறது அதேநேரத்தில் நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Previous articleபாஜக ஆட்சி தமிழர்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது; ரூ1000 கோடி கடனுதவி;? பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார்?
Next articleவழிப்பறி கும்பல்; இளம் பெண் உட்பட 4 பேர் கைது!