டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் இருக்கக்கூடிய ஒடென்சி இன்றைய தினம் முதல் வரும் 24-ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும் உலக சாம்பியனான இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து பங்கேற்க இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னர் பிவி சிந்து பங்கேற்கும் முதலாவது போட்டி இது என்ற காரணத்தால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் பிவி சிந்து துருக்கியின் வீராங்கனை நீஸ்லிஹன் யிஜித்துடன் மோத இருக்கின்றார், சென்ற வாரம் நடைபெற்ற உபேர் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் காயம் அடைந்ததன் காரணமாக, வெளியேறிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தன்னுடைய முதல் ஆட்டத்தில் ஜப்பான் நாட்டின் அயா ஒஹோரியுடன் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்ஷயா சென் சர்மா, ஸ்ரீகாந்த் ,சமீர் வர்மா, காஷ்யப் உள்ளிட்டோரும் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராத் செட்டி, சத்யராஜ், கங்கி ரெட்டி, அஸ்வினி ஜோடியும் இந்த போட்டியில் களம் காண இருக்கிறது.
பேட்மின்டன் போட்டியில் களம் காண இருக்கும் இந்திய வீராங்கனை பிவி சிந்து சாய்னா நேவாலுக்கு பின்னர் இந்தியாவின் வீராங்கனையாக இருந்தாலும் சர்வதேச அளவில் பெயர் வாங்கியிருக்கிறார் என்பது மேலும் ஒரு சிறப்பம்சம். ஆகவே இந்த போட்டிக்கு விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.