வடகிழக்கு பருவமழை இந்த வருடம் இயல்பை விட சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொடக்கத்திலேயே தெரிவித்திருந்தது.
அதனடிப்படையில், பருவமழை ஆரம்பத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இயல்பான நிலையை விட சற்று அதிகமாக பதிவாகி வருகிறது. அதிலும் வங்கக் கடல் பகுதியில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, சென்ற சில தினங்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் ஏற்பட்ட தாழ்வு பகுதி தற்சமயம் தாழ்வு மண்டலம் வலுவடைந்து இருக்கிறது, இதனால் நேற்றையதினம் 8 மாவட்டங்களுக்கு அதிக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில், இன்றும் 8 மாவட்டங்களுக்கு அதிக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி இன்று திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் அதிக மழை சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கனமழை விழுப்புரம், தர்மபுரி, காஞ்சிபுரம், ஈரோடு, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வரையிலும், கோயமுத்தூர், நிலகிரி, செங்கல்பட்டு, நாமக்கல், திருச்சி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நாளைய தினம் சேலம், வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மற்ற மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
எதிர்வரும் சனிக்கிழமை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக பகுதிகளில் மிதமான மழையும், 14ஆம் தேதி நீலகிரி, சேலம், கோவை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.
தென்மேற்கு வங்க கடல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள கூடிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் நேற்று வரை சராசரியாக 38 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் பதிவாகும் மழை அளவை விட 50 சதவீதம் அதிகமாக இருக்கிறது என தெரிவித்து இருக்கிறது வானிலை ஆய்வு மையம். அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் இயல்பை விட 112% அதிக மழை பதிவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பல பகுதிகளில் 4️ தினங்களாக வெள்ளம் வடியாத நிலையே காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சென்னைக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
தலைநகர் சென்னையில் நேற்று பகலில் லேசான மழை பெய்தது, மாலையில் மழை தீவிரம் அடைந்தது இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது காணமுடிந்தது.
இதற்கிடையே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் இருக்கக்கூடிய மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நிருபர்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்ததாவது, வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாமல்லபுரத்திற்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும், இடைப்பட்ட பகுதியில் நாளைய தினம் கரையைக் கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதை அடுத்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
வங்கக் கடலில் உருவாகி இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, பெய்து வரும் மழையின் தீவிரத்தை அடுத்து பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அதிலும், குறிப்பாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தனியாக வெளியில் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் நீர்நிலைகளின் அருகில் செல்வதையும், செல்பி எடுப்பதையும், முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும், ஆறு மற்றும் குளங்களில் குளிக்க செல்வதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார் அமைச்சர்.
அடையாள அட்டை, கல்வி சான்றிதழ்கள், நிலப்பட்டா, பத்திரங்கள், உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நெகிழிப் பைகளில் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். வீடுகளில் அதன் அருகாமையில் அருந்த மின்கம்பிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பினை கருதி அருகில் உள்ள நிவாரண மையங்களில் தங்கிக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்.
டார்ச் லைட்டுகள், தீப்பெட்டிகள், மெழுகுவத்தி, மற்றும் மருந்துகள் உலர்ந்த உணவு வகைகளை நெகிழிப் பைகளில் வைத்து எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக வைத்துக்கொள்ளவேண்டும். நீர் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளை கட்டி வைக்காமல் கால்நடைகளை தாங்களாகவே எளிதில் வெளியேற்றுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். தேவையின்றி மின்கம்பங்களில் அருகில் செல்வதை தவிர்க்கவேண்டும். நீரிலோ அல்லது மின்சாரத்தில் பொதுமக்கள் காயப்பட நேர்ந்தால் உடனடியாக 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இடி, மின்னல், உண்டாகும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டும் நடைமுறைகளை கடை பிடித்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் tnsmart என்ற இணையதளத்திலும்,9445869848 என்ற வாட்ஸ்அப் நம்பரிலும் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இது தீவிரமடைந்து தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. இந்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மிக கனமழையும், ஒரு சில பகுதிகளில் கனமழையும், பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக கடலோரப் பகுதிகளை இந்தத் தாழ்வு மண்டலம் நெருங்கி உள்ளதால் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று காலை முதல் வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த காற்று காரணமாக, விளம்பர பலகைகள் சேதமடைய வாய்ப்பு இருக்கிறது, இதற்கு அருகில் பொது மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பாதுகாப்பாகவும், இருக்க வேண்டும் என்றும், வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகவும், அதனையடுத்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரை பகுதிகளில் நெருங்கி இருக்கிறது இது மேலும் புயலாக மாற வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனாலும் அதே சமயத்தில் தாழ்வு மண்டலமாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம், புதுவை, கடற்கரையை ஒட்டி காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று மாலை கரையை கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் கன மழை பதிவாகி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 13ஆம் தேதி அதாவது நாளை மறுதினம் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. இதுவும் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது, வழக்கமாக மேற்கு, வட மேற்கு திசையில் நகரும் என்ற நிகழ்வுகளும் நல்ல மழையை கொடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த நிகழ்வுகள் மூலமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது பற்றி இன்று தெரிந்துவிடும்.