துணை முதல்வர் பதவி தேவையில்லை!! நான் உள்துறை அமைச்சராக இருந்தால் நிலைமை வேற மாறி!!

Photo of author

By Jeevitha

ஆந்திர மாநில துணை முதல்வரும் பஞ்சாயத்து ராஜ், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அப்போது நடைபெற்ற விழாவில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பெற முடியும் என்று கூறியுள்ளார்.

நம் நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது என்று கூறியுள்ளார். அதற்கான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு சரியாக கொடுக்க வேண்டும். ஆனால் இந்த நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை. மேலும் அவர் ஜாதி,மதம் என பார்க்காமல் குற்றவாளிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதிகாரத்தை கொண்ட அரசு அதிகாரிகள் தவறு செய்பவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். அவர்கள் தனது  உறவினர்கள் என யாரையும் விட கூடாது என தெரிவித்திருந்தார். அப்போது ஆந்திர துணை முதலமைச்சர் நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்றால் வேறு மாதிரி இருக்கும் என்னை அந்த நிலைக்கு தள்ளி விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் தேவைப்பட்டால் நான் உள்துறை அமைச்சர் பொறுப்பையும் நானே ஏற்பேன் என்று அடித்து கூறியுள்ளார். அது மட்டும் அல்லாமல் அவர் எனக்கு துணை முதல்வர், ஆட்சி,அதிகாரம் முக்கியம் இல்லை மக்களுக்கு சேவை செய்வது தான் முக்கியம் என தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் ஆட்சி அதிகாரத்தில் வந்து விட்டோம் என அமைதியாக இருக்க கூடாது. மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.