தமிழக அரசாணையை மீறுகிறாரா துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்! இதற்கு கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்கிறார்கள். அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் அச்சிடப்பட்ட டீ-சர்ட் அணிந்து வருகிறார் என கண்டனம் எழுந்துள்ளது.
இதை எதிர்த்து சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு 2019-ம் ஆண்டு வெளியான தமிழக அரசாணையை சுட்டிக்காட்டும் விதமாக இருக்கிறது. அந்த அரசாணையில் ஃபார்மல் பேண்ட் – ஷர்ட் அல்லது தமிழக பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் அதை எதிர்க்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் நடந்துள்ளார். இதை எண்ணி இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . அரசு ஊழியர்கள் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது அரசியல் சார்ந்த சின்னத்தை வெளிப்படுத்த கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த சட்ட விரோதமான செயலை கண்டித்து அனைவரும் முறையான ஆடைகளை அணிய உத்தரவிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.